Tuesday, 24 January 2017




 சத்யன்       சத்திய பூ     பூ 03   இதழ் 01     25-01-2017

                          கட்சிகளுக்கு பணம் ???
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்க்கவும் . புள்ளி விவரங்களுடன் கட்சிகள் பெரும்
நன்கொடையை (?) அம்பலப்படுத்தியுள்ளன.
சில புள்ளி விவரங்கள் ....
     *** கடந்த 11 வருடங்களில் அணைத்து கட்சிகளும் 11,367 கோடி ரூபாய் நிதியை
        பெற்றுள்ளன. (அம்மாடியோவ் !)
     *** இதில் 7,833 கோடி ரூபாய் விவரம் இல்லாத நபர்களிடம் பெற்றது .(?) இது
        எந்த கணக்கிலும் வரவில்லை. (?)
     *** 1,835 கோடி ரூபாய் தெரிந்த நபர்களிடம் இருந்து வந்தது. (கணக்கில் உள்ளது.)
     *** காங்கிரஸ் கட்சி 3,323.39 கோடி ரூபாயை கணக்கில் வராமல் பெற்றுஉள்ளது.
     *** பிஜேபி 2,125.91 கோடி ரூபாயை அனாமத்தாக கணக்கில் வராமல் பெற்றுஉள்ளது.

     ***பிராந்திய கட்சிகளின் வரவு 652% (அனாமத்து ,கணக்கில் வராமல்) உயர்ந்து உள்ளது.
     ***தேசிய கட்சிகளின் வரவு 313% (கணக்கில் வராதது) உயர்ந்து உள்ளது.
     நிற்க.
     எல்லா கட்சிகளின் கணக்கும் செமையாக உள்ளது. எல்லாம் கோடி கணக்கில் தான்.
     இவர்களுக்கு பெயர் தெரியாமல் பணம் கொடுப்பது யார் ?
     சந்தேகம் இல்லை. பெரும் பணமுதலைகள் தான்.
     இப்படி இருக்கையில் பணமுதலைகளுக்கு சாதகமாகவே இவர்கள் சட்டம் போடுவார்கள்.
     மக்களுக்கு பட்டை நாமம் தான்.
     இது ...இந்த கட்சிகள்  மக்களுக்கு ஆனதல்ல !
     பணக்கார முதலைகளின் கைக்கூலியே !!
     மக்கள் விழித்து எழ வேண்டும் !!!

2 comments:

  1. சரியான அம்பலப்படுத்தல் சத்தி.

    ReplyDelete

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!